ஹென்லிக்கு வரவேற்பு கொடுங்கள்

ஹென்லி ப்ராபர்டீஸ் என்பது ஒரு முன்னணி வீடு கட்டும் நிறுவனமாகும். இது விக்டோரிய மாநிலம் முழுவதும் புதிய இல்லங்கள், வீடு மற்றும் நிலத் தொகுப்புகள், கட்டி முடிக்கப்பட்ட இல்லங்கள் மற்றும் இடிக்கப்பட்ட இல்லங்களைத் திரும்பக் கட்டுதல் போன்றவற்றில் சிறப்புத் தன்மை வாய்ந்தது.

தரமான வீட்டு வடிவமைப்பு, பாணி மற்றும் கட்டுமானத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக - ஓர் உலகளாவிய முன்னணி நிறுவனத்தின் ஆதரவுடன் - நாங்கள் பெரிய வணிக வாங்கும் சக்தி மற்றும் ஆதரவுடன் கூடிய ஓர் உள்ளூர் கட்டுமான நிறுவனமாகும்.

ஹென்லியில் நீங்கள் கட்டும் ஒவ்வொரு பகுதியும் உத்வேகத்துடன், வெளிப்படையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நீங்கள் முதல் முதலாக உங்கள் காட்சி விளம்பர இல்லத்துக்கு வருகை தருவதில் இருந்து வியப்பில் மூழ்கடிக்கும் வீடுகள் உலகத்தின் அனுபவத்தைப் பெறும் வரை - விற்பனை, தெரிவு, கட்டுமானம் மற்றும் எங்கள் இல்லக் காப்புறுதிக் குழுவுடன் கொள்முதலுக்குப் பிந்தையக் கட்டம்  போன்றவை மூலமாக - நாங்கள் முழுச் செயல்முறையையும் சுவாரஸ்யமாகவும், பொறுப்புள்ளதாகவும் மற்றும் வெளிப்படையானதாகவும் இருக்க முயற்சி செய்வோம். அத்துடன் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையும், அதற்குப் பின்னால் பல ஆண்டுகள் வரையிலும் பார்த்துக்கொள்வோம்.

ஹென்லியில் முதன்முதலாகக் கூறும் "ஹல்லோ" விலிருந்து உங்கள் புதிய வீட்டில் இறுதிப் பணிகள் முடிக்கப்படும் வரையிலும் நாங்கள் உங்களுக்காக உடன் இருப்போம். கேட்பதற்கு எளிமையானதைப் போல, எங்கள் தத்துவம் அனைத்தும் எங்களைப் பற்றியதல்ல - எங்கள் தத்துவம் உங்களைப் பற்றியதாகும்.

சுமிடோமோ ஃபாரஸ்ட்ரி குழுமத்தின் ஒரு பகுதி

ஹென்லி ஜப்பானில் உள்ள சுமிடோமோ ஃபாரஸ்ட்ரி குழுமத்தின் பெருமை மிகு பங்குதாரராகும். 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்துடன், புதிய வீட்டு வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில், சுமிடோமோ ஓர் உலகளாவிய முன்னணி நிறுவனமாகும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 வீடுகளுக்கு மேல் கட்டி, சுமிடோமோ உலகளாவிய வாங்கும் சக்தி மற்றும் அனுபவங்களை வழங்குகிறது. இந்த வலுவான அடித்தளம்தான் ஹென்லியை உலகின் முன்னணி வீடு கட்டுநர்களில் ஒன்றாகத் தோன்றச் செய்கிறது.

 

உத்தரவாதங்களுக்கு வரவேற்பு

எங்கள் வேலை மற்றும் மக்கள் மேல் எங்களுக்குள்ள நம்பிக்கையானது, ஆஸ்திரேலியாவில் ஏராளமான உத்தரவாதங்கள் மற்றும் ஆதரவை  நாங்கள் வழங்கும் இந்த உண்மையில் விளங்கும்.

ஹென்லியில், எங்கள் இல்லங்கள் உயர்ந்த தரத்தில் கட்டப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யும் வகையில் நாங்கள் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்போம். எங்களது அனைத்து இல்லங்களுக்கும்12 மாதம் நீட்டிக்கப்பட்ட பராமரிப்புக் காலத்தை வழங்குகிறோம். தொழில்துறையின் தரநிலை மூன்று மாதங்களாக இருந்தபோதிலும், ஒரு வீட்டில் ஆண்டின் நான்கு பருவங்களிலும் குடியேற அனுமதிப்பதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். எங்கள் அனைத்து இல்லங்களும் 50 ஆண்டு கால கட்டுமான உத்தரவாதத்துடன் வருகின்றன. HIA உத்தரவாதக் காலமான 10 ஆண்டுகளுடன் இது கூடுதலாக வழங்கப்படும்.  இந்த கூடுதல் காப்புறுதிகள்தாம் ஒரு வீட்டின் வாழ்நாள் காலம் முழுவதும் மன அமைதியைக் கொடுக்கும்.

வீட்டு உரிமைக்கு வரவேற்பு

ஒரே அளவு அனைத்துக்கும் பொருந்தும் என்பது, குறிப்பாக புதிய வீடுகள் என்று வரும்போது, ஒன்றுமில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். வீட்டு வரைபடங்கள், வீட்டு அளவுகள், வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் வடிவங்கள் போன்றவற்றை ஆராய, செயலாக்கத்தையும், சுதந்திரத்தையும் வழங்கும் வகையில் முழு ஹென்லி சேகரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் உங்கள் விருப்பப்படியே உங்கள் வீட்டை உருவாக்க முடியும்.

முதல் தடவையாக வாங்குதல், குடும்ப வீடு, விருப்பத்தின் பேரில் மேம்படுத்துதல் அல்லது தற்போது தேவைக்கேற்ப இடித்துத் தள்ளுதல் மற்றும் திரும்பக் கட்டியெழுப்புதல், எங்களிடம் தெரிவுசெய்ய மூன்று விதமான வீட்டுத் தொகுதிகள் உண்டு - ஹென்லி எசன்ஸ் கலெக்ஷன், ஹென்லி கலெக்ஷன் மற்றும் ஹென்லி ரிசர்வ் கலெக்ஷன்.

16 முதல் 49 சதுர அளவுகள் வரையிலான ஒவ்வொரு வீட்டு வரைபடமும் நவீன வாழ்க்கை முறை, அந்தரங்கம் மற்றும் வசதி முறைகளுடன், ஓய்வு அல்லது பொழுதுபோக்குக்கான பல்வேறு இடவசதியையும் சமநிலைப்படுத்தும் வகையில் அளிப்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

உங்கள் நிலமோ அல்லது வீடு மற்றும் நிலத்தொகுப்போ - எதுவாயினும் நீங்கள் விரும்பும் இடத்தைக் கண்டு கொள்வதைப் பற்றியதாகும்.

வீடு மற்றும் நிலத்தொகுப்புகள் இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய தொகுப்பாகும். மெல்போர்னில் மிகவும் பிரபலமான இடங்களிலிருந்து நிபுணர்கள் தேர்வு செய்த நிலம் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எங்களது விருது வென்ற வீட்டு வடிவமைப்புகளுடன் உகந்த முறையில் இணை சேர்க்கப்பட்டு, எஸ்டேட் வழிமுறைகளுக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான மதிப்பு கூட்டப்பட்ட தொகுப்புகள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் நிலையான விலை பற்றிய நம்பிக்கையையும் சேர்த்தால் தொகுப்புகள் நல்ல நியாயமானதாக இருக்கும்.  எங்களது வீடு மற்றும் நிலத் தொகுப்புகளுக்கு இங்கே சொடுக்கவும். உங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலோ அல்லது தற்போதுள்ள வீட்டை இடித்து, திரும்பவும் கட்ட எண்ணியிருந்தாலோ, நீங்கள் விரும்புகின்ற இடத்தில் ஓர் அழகான இல்லத்தை நீங்கள் உருவாக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். வீட்டை இடித்தல், திரும்பக் கட்டுதல் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். 

அல்லது இப்போதே ஒரு வீடு தயாராக வேண்டுமென நீங்கள் விரும்பினால் - விற்பனைக்கு வந்துள்ள, ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வீடுகள் உட்பட, கட்டப்பட்ட எங்களது வீடுகளை நீங்கள் பார்க்க முடியும். நிறைவடைந்த வீடுகளுக்கு நீங்கள் நேரடியாகக் குடிபோக முடியும். எங்களது கட்டப்பட்ட வீடுகளைக் காண இங்கே சொடுக்கவும்.

அனைத்துத் தெரிவுகளையும் காட்சி மையத்திலோ அல்லது எங்களது இணைய தளத்திலோ எளிதாக உலவக்கூடிய தேடல் கருவிகள் மூலம் இடம், புறநகர் அல்லது வீட்டு வடிவமைப்பு வழியாக ஆய்வு செய்யவும். எங்களது வீடு வடிவமைப்புகளைக் காண இங்கே சொடுக்கவும்.

எங்களது காட்சி விளம்பர இல்லங்கள்

மிக நவீன மற்றும் மிகச் சிறந்த வீட்டு வடிவமைப்புகள், கட்டிட  முகப்புகள், உள்ளமைப்புகள், பொருத்து சாதனங்கள் மற்றும் ஒட்டுச் சாதனங்கள், அத்துடன் எங்களுடைய வீடுகள் மற்றும் கட்டிட அனுபவம் பற்றி அனைத்தும் தெரிந்துள்ள எங்கள் அர்ப்பணிப்புள்ள குழுவையும் எங்களது காட்சி மையங்கள் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன.

எங்களது ஹென்லி கண்காட்சியில் நீங்கள் மெல்போர்னின் மிகச் சிறந்த விளம்பர இல்லங்ளைக் காணலாம். 

எங்களது வீடுகளின் உலகம் எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் உண்மையில் தனித்தன்மையை வழங்குகின்றன. 8 காட்சி விளம்பர இல்லங்கள் வரை இணையத்தில் உலவி, நீங்கள் சுலபமாக ஒவ்வொரு அம்சத்தையும், நிறைவையும், மேம்படுத்தலையும் மற்றும் சேர்த்தல்களையும் ஒப்பிட முடியும் - அனைத்தும் ஒரே இடத்தில். குழந்தைகள் தங்கள் சொந்த 'குழந்தைகள் உலகத்தை' கண்டுகளித்துக் கொண்டிருக்கும்போது, கண்காட்சியில் உள்ள மிகவும் பிரபலமான எங்கள் வீடுகளை ஆராய்ந்து பார்த்து, எங்கள் முழுமையான அறிவு மையத்தில் உலவி, எங்கள் ஹென்லி கஃபேயில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அருகில் இருக்கும் கண்காட்சி மையத்துக்குச் செல்வதன் மூலம் எங்களுக்கு வரவேற்பு கூறுங்கள். இங்கே சொடுக்கவும்.

உலகளாவிய வாங்கும் சக்தியானது உள்ளூர் வாழ்க்கை முறை அறிவைச் சந்திக்கும்போது, மேம்பாடுகள் மற்றும் ஆடம்பரமான நிறைவுகளின் விரிவான பட்டியல் ஹென்லியின் தரம்தான் அதன் விளைவாகும்.  உங்கள் புதிய இல்லத்தில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

ஹென்லி இல்லத்தில் எப்போதும் நிறைய உண்டு

முழுமையான வெளிப்படைத் தன்மையும் ஒரு தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நாங்கள் தனிப்பட்ட வீட்டின் விலை, எங்கள் ஆடம்பரச் சேர்க்கைகளின் பட்டியல், கட்டுமான வீட்டு வரைபடத் தெரிவுகளுக்கான நிலையான விலை, கட்டிட உருவாக்கத் திட்டம் மற்றும் படிப்படியான தகவல்கள் உள்ளிட்ட, முன்கூட்டியே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் நாங்கள் வழங்குவோம்.

எங்கள் ஹென்லி தெரிவு மையத்தில் பெரியதாக வேண்டி உலவவும்

உட்புற வடிவமைப்பை விரும்புகிறீர்களோ இல்லையோ, ஹென்லி தெரிவு மையத்தில் நீங்கள் வீட்டிலிருப்பதைப் போலவே உணர்வீர்கள். உங்கள் பாணியின் உந்துவேகத்தைக் கண்டுபிடிக்க, சேகரிக்க மற்றும் உருவாக்க இது ஒரு மன அழுத்தம் இல்லாத இடமாகும். அத்துடன் இது உங்கள் முழு வடிவமைப்பை முடிவெடுப்பதில் உதவி புரியவோ மனதைத் தூண்டக்கூடிய, அறிவார்ந்த மற்றும் தொழில்முறை சார்ந்த வடிவமைப்பாளர்களை அணுக வைக்கவோ அல்லது உங்களுக்கு ஏற்கனவே அது பற்றிய தொலைநோக்குப் பார்வை இருந்தால், செயல்திட்டம் மூலம் எளிதாக உங்களை நடத்திச் செல்லவோ முடியும்.

இது ஒரு விரிவான பாணி மையமாக உள்ளது. இங்கு நீங்கள் அனைத்து உட்புற மற்றும் வெளிப்புறத் தெரிவுகள், பொருத்துச் சாதனங்கள் மற்றும் ஒட்டுச் சாதனங்கள், மேலும் எல்லா தரமான உள்ளடக்கங்களையும் மற்றும் மேம்பாடுகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வாட்டர்ஸ்டோனின் நிதியம்

வாட்டர்ஸ்டோன் நிதியம் என்பது ஹென்லி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஒரு தனிப்பட்ட அடமான தரகு சேவையாகும்.

உங்கள் தற்போதைய நிதி நிலைமையை மதிப்பீடு செய்து, விரிவான மற்றும் தனிப்பட்டோர்க்கென உருவாக்கப்பட்ட வீட்டுக் கடன் தீர்வை வழங்குவதற்கு எங்களிடம் அனுபவம் வாய்ந்த, கட்டுமான வீட்டுக் கடன் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. 

கட்டுமானத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள நாங்கள், சிக்கலான கட்டுமான நிதியைப் பற்றி அறிந்திருக்கிறோம். அத்துடன் பல்வேறு கடன் வழங்குவோர்கள் மற்றும் பொருட்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் சமயத்தில் எதைப் பார்க்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் வழங்கும் பரிந்துரைகளில் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.

வாட்டர்ஸ்டோன் நிதியம் எங்கள் கண்காட்சி மையங்களில் அந்த இடத்திலேயே ஆரம்பக்கட்ட தகுதியை வழங்க முடியும். அதாவது நீங்கள் உங்கள் கடன்வாங்கும் திறனையும், உங்கள் நிலைமைக்கேற்ற மிகச் சிறந்த நிதித் தெரிவுகளையும் விரைவாகவும், எளிதாகவும் அறிந்து கொள்ள முடியும்

எங்களைத் தொடர்பு கொள்ள

உங்களுக்கு அருகில் ஹென்லி கண்காட்சி ஒன்று உள்ளது - பின்வரும் இடங்களில் ஒன்றில் உள்ள எங்கள் ஆடம்பர கண்காட்சி மையங்களில் ஒன்றுக்கு வருகை புரியவும்.   உங்களுக்கு அருகிலுள்ள கண்காட்சி மையத்தைக் கண்டுபிடிக்க இங்கே சொடுக்கவும்.